2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சைனோபார்ம் பாவனைக்கு WHO அனுமதி

S.Sekar   / 2021 மே 08 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின சைனோபார்ம் தடுப்பூசியை அவசர பாவனைக்கு பயன்படுத்தவதற்கான அனுமதியை உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) வழங்கியுள்ளது. 

சீனாவிடமிருந்து கடந்த மாதம் பெற்றுக் கொண்ட 600,000 தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதிக்காக இலங்கை காத்திருந்தது.

2022 ஆம் ஆண்டில் காலாவதியாகும் இந்த தடுப்பூசிகள், தற்போது பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. 

பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிராந்திய நாடுகளுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான சைனோபார்ம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பயன்படுத்தி தமது குடிமக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகளை இந்த நாடுகள் ஏற்கனவே, ஆரம்பித்துள்ளதாகவும், 40 க்கும் அதிகமான நாடுகள் சைனோபார்ம் தடுப்பூசியை அவசர பாவனைக்காக அனுமதித்துள்ளன.

இதுவரையில் எந்தவொரு பக்கவிளைவுகள் தொடர்பான முறைப்பாடுகளும் எழவில்லை என கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .