Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Mayu / 2024 ஜூலை 09 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளேயே மிஞ்சும் வகையில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
சவுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் தூபே (வயது 24). கடந்த 35 நாட்களில் மட்டுமே இவர் 6 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.
கடந்த ஜூன் 2 -ஆம் திகதி விகாஸ் தூபே அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடித்துள்ளது. உடனே வைத்திசாலைக்குகொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார்.
இவ்வாறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலக்கட்டத்தில் 6 முறை விகாஸ் தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.
அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் திங்கட்கிழமை அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ள விகாஸ் தூபே கூறுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாம்பு கடித்ததும் பயப்படாமல் பயமின்றி சிகிச்சை பெற்றதாக விகாஸ் கூறியுள்ளார். 35 நாளில் 6 முறை பாம்புகள் கடிக்கு ஒருவர் ஆளாகும் வினோத சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
20 minute ago