2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

சுப்ரமணியன் சுவாமியுடன் ஜீவன் தொண்டமான் பேச்சு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆ.ரமேஸ், பி.கேதீஸ்

இலங்கைக்கு  விஜயம் செய்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் உள்ள இராஜாங்க அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில்  இந்த சந்திப்பு நேற்று (13) இடம்பெற்றது. இந்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள்
தலைவரான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்துக்கு சுப்ரமணியன் சுவாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்தார்ந்தார்.

மேலும்,  இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர உறவு தொடர்பாகவும்,இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்க்கை நிலை மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் இருவருக்கும் இடையில்
கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .