Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Simrith / 2025 மார்ச் 03 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் பாராளுமன்றத்தில் மோதிக்கொண்டனர்.
"முழு நாடும் மின் தடையை எதிர்கொண்ட நேரத்தில் அமைச்சர் தனது நண்பர் சந்தாநாயக்க மற்றும் சிலருடன் ஹந்தபனகொடவில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அந்த நேரத்தில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை" என்று பாராளுமன்ற உறுப்பினர் தசநாயக்க கூறினார்.
சிறிது நேரம் கழித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்கொடி, மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் இருந்ததாகக் கூறினார்.
"அமைச்சரவை கூட்டம் இருந்ததால் நான் ஜனாதிபதியுடன் இருந்தேன். பின்னர் நான் பத்தரமுல்லையில் உள்ள மின் பரிமாற்ற நிலையத்தில் இருந்தேன். பிற்பகல் 3.30 மணி வரை நான் அங்கேயே இருந்தேன்," என்று அமைச்சர் கூறினார்.
அப்போது உணர்ச்சிவசமடைந்த எம்.பி. சாமர சம்பத், ”வாயை மூடி இருங்கள். நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாதா” என்று தமிழில் எரிசக்தி அமைச்சரைத் திட்டினார்.
இருவரும் ஒருவருக்கொருவர் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாக குற்றம் சாட்டியதால் சபையில் வாக்குவாதம் சூடுபிடித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago