Editorial / 2021 மார்ச் 22 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாய இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ பயணித்த டிப்பெண்டர் ரக வாகனம், மெதக ஒப்பேகொட பும்பார ஒப்பேகொட பும்பார ஓயாவை ஊடறுத்த செல்லும் சாப்பாத்து பாலத்தின் ஊடாக பயணித்து கொண்டிருந்த போது, அந்த வாகனம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதுதொடர்பில்,மெதகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிபில மெதகம பிரதேசத்தில் இடம்பெற்ற பல வைபவங்களில் கலந்துகொண்டுவிட்டு திரும்பவும் மொனராகலை வரைக்கும் பயணித்து கொண்டிருந்த போதே, இராஜாங்க அமைச்சர் மேற்பவடி அனர்த்தத்துக்கு முகங்கொடுத்தார்.
கடும் மழைக்காரணமாக பும்பார ஓயாவைவின் நீர்மட்டம் அதிகரித்து இருந்தது. அப்போதே, பாலத்தின் ஊடாக வாகனம் பயணித்த போது, நீரில் இழுத்துச் செல்லப்பட்டது. அவ்வாகனத்தில் அமைச்சரும் இருந்துள்ளார். இதன்போது, அங்கு திரண்ட பிரதேசவாசிகள் இராஜாங்க அமைச்சரை காப்பாற்றிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் எவ்வருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago