2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சபாநாயகர் நேரில் சென்று அஞ்சலி

George   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாருக்கு புதன்கிழமை காலை விஜயம் செய்த, சபாநாயகர் கரு ஜெயசூரிய,எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.

அடைக்கலநாதனின் தந்தையான சித்த வைத்தியர் அடைக்கலம் அமிர்தநாதன், தனது 83ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை(4) மாலை காலமானார்.

அவரது பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் உள்ள  இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. விசேட ஹெலிகொப்டர் மூலம்  மன்னாருக்கு வந்து இவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இவர்களுடன், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க, எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், ஜோகேஸ்வரன்,வியாலேந்திரன் ஆகியோரும் வடக்கு மாகாணசபை மற்றும் கிழக்கு மாகணசபைகளின் உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .