2025 ஒக்டோபர் 06, திங்கட்கிழமை

விபச்சாரியாக நடித்த வழக்கறிஞர் கைது

Janu   / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் தன்னை விபச்சாரியாக காட்டிக்கொண்டு, பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 குறித்த சந்தேக நபர் நிர்வாண புகைப்படங்களை தயாரித்து இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 சந்தேக நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக சி.ஐ.டியின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர் தொடர்பாக தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X