2026 ஜனவரி 10, சனிக்கிழமை

சமூக ஊடக செய்தி: பொலிஸ் விளக்கம்

Editorial   / 2026 ஜனவரி 09 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொலிசியினால் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி தொடர்பான விளக்கம். "பொலிஸ் வெளியீடு" எனும் தலைப்பில், இலங்கை பொலிசியினால் வெளியிடப்பட்ட செய்தி எனக் கூறி, சில தினங்களாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருவதை அவதானிக்க முடிகின்றது. குறித்த செய்தியின் ஊடாக, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் எனக் குறிப்பிடப்பட்டு, பொய்யான, உறுதிப்படுத்தப்படாத மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேற்கண்ட செய்தி எந்தவிதத்திலும் இலங்கை பொலிசியினால் வெளியிடப்பட்ட அறிக்கை அல்ல என்பதை இவ்வழியாக தெளிவுபடுத்துகிறோம். இலங்கை பொலிசியினால் வெளியிடப்படும் அனைத்து உத்தியோகப்பூர்வ செய்திகளும், ஊடக அறிக்கைகளும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களும் இலங்கை பொலிசின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் பொலிஸ் ஊடகப் பிரிவின் ஊடக வெளியீடுகள் மற்றும் இலங்கை பொலிசின் உத்தியோகப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் ஊடாக மாத்திரமே வெளியிடப்படுகின்றன. இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூகமயமாக்கப்படும் போது, பொதுமக்களிடையே தேவையற்ற பயமும் நம்பிக்கையற்ற நிலையும் உருவாகக்கூடும். அதேவேளை, இலங்கை பொலிஸ் எப்போதும் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உறுதியாக நடவடிக்கை எடுத்து வருவதை இதன் ஊடாக வலியுறுத்துகிறோம். எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், இலங்கை பொலிசியினால் வெளியிடப்படும் உண்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ தகவல்களை மட்டுமே கவனித்து நம்பிக்கை கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .