2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

’சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்’

Freelancer   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தியுள்​ளார். 

கடந்த 1947 ஆம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் உதய​மாகின. இந்த பிரி​வினை​யின்​போது ஏற்​பட்ட வன்​முறை சம்​பவங்​களில் சுமார் 20 லட்​சம் பேர் உயி​ரிழந்​தனர். சுமார் 2 கோடிக்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர்.

இதை நினை​வு​கூரும் வகை​யில் ஓகஸ்ட் 14 ஆம் திகதி, பிரி​வினை கொடுமை​கள் நினைவு தின​மாக அறிவிக்​கப்​பட்​டது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், 

இந்த தினம் இந்​திய வரலாற்​றில் மிக​வும் துயர​மான நாள் ஆகும். பெரும் எண்​ணிக்​கையி​லான மக்​கள் துன்​பம், வேதனை​களை அனுப​வித்​தனர். கற்​பனைக்கு எட்​டாத வகை​யில் மிகப் ​பெரிய இழப்​பு​களை எதிர்​கொண்​டனர்.

எனினும் தாங்க முடி​யாத வலி, வேதனையை மக்​கள் துணிச்​சலுடன் எதிர்​கொண்​டனர். வீழ்ச்​சி​யில் இருந்து எழுச்சி பெற்ற மக்​கள், வளர்ச்​சிப் பாதை​யில் பல்​வேறு மைல்​கற்​களை எட்டி புதிய சாதனை​களை படைத்​தனர். இந்த நாள் நமக்கு ஒரு படிப்​பினையை கற்​றுத் தரு​கிறது. நாம் சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும். இதன்​மூலமே நாட்​டின் ஒற்​றுமையை வலுப்​படுத்த முடி​யும் என்று குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .