Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 19 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவன்காட் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்கவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமன் திசாநாயக்க, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
தன்னை கைதுசெய்வதை தவிர்க்குமாறு கோரி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க தாக்கல் செய்த முன்கூட்டிய பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான ரங்க திசாநாயக்க நேற்று முன்தினம் நிராகரித்திருந்தார்.
அத்துடன், ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பில், பிணை வழங்குவதற்கான அதிகாரம் நீதவான் நீதிமன்றத்துக்கு இல்லையென, நீதவான் கூறியிருந்தார்.
முன்னதாக, அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் அறிவுறுத்தியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago