2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

செம்மணியில் இதுவரை 40 மனித எச்சங்கள்

Freelancer   / 2025 ஜூலை 03 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 8ஆம் நாள் பணிகள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. 

இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 34 முழுமையான மனித எலும்புக்கூடுகளும், மேலதிகமாக 6 எலும்புக்கூடு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இந்த அகழ்வு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .