Freelancer / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோமாலியா தலைநகரில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில், சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிலேயே அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த உணவகத்திற்குள் நுழைந்த அல் ஷபாப் அமைப்பினர் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதன்போது, சிலரை பணயக்கைதிகளாக சிறைபிடித்ததுடன், தங்கள் உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 60 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகின்றது. (a)
17 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago