Freelancer / 2025 மே 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமையலில் ஈடுபட்டிருந்த போது அடுப்பு எரியாததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முற்பட்ட இளங்குடும்பப் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயர்ந்துள்ளார்.
புலவர்வீதி, நவாலி வடக்கு மானிப்பாயைச் சேர்ந்த கஜன் தனுஷா (வயது 23) என்ற ஒரு வயது குழந்தையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி மதியம் மேற்படி இளம் தாயாரும் பிள்ளையும் வீட்டில் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அடுப்பு எரியாததால் அடுப்பை மூட்ட மண்ணெண்ணெய் ஊற்றிய போது மேற்படி பெண்ணின் உடையிலும் மண்ணெண்ணெய் சிந்தியதனால் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
9 hours ago
14 May 2026
14 May 2026
14 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 May 2026
14 May 2026
14 May 2026