Editorial / 2026 மார்ச் 17 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதிய அடுப்புகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் தொழிலாளி.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர்ச் சூழல் காரணமாக, இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, சென்னையில் விறகு அடுப்புகளின் பயன்பாடும் உற்பத்தியும் பெருமளவு அதிகரித்துள்ளன.
எரிவாயு கிடைக்காததால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. செயல்பாட்டில் உள்ள சில உணவகங்கள், உணவு தயாரிப்பு அளவைக் குறைத்துள்ளன. குறிப்பாக, நான்கு வகை பொரியல்களுக்குப் பதில் ஒரு வகை பொரியல், மூன்று வகை சட்னிகளுக்குப் பதில் ஒரு வகை சட்னி எனச் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பல உணவகங்கள் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
மாணவர் விடுதிகள், டீக்கடைகள் மற்றும் தனி வீடுகளில் சுடுதண்ணீர் காய்ச்சுவதற்கும் சமைப்பதற்கும் விறகு அடுப்புகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் சென்னை பேசின் பாலம் அருகே 24 மணி நேரமும் விறகு அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தகடுகள் மற்றும் கம்பிகளை வெட்டி, வெல்டிங் செய்யும் பணிகள் ஒரு இடத்திலும், கூர்மையான பகுதிகளை நீக்கி வண்ணம் (Paint) பூசும் பணிகள் வேறு இடங்களிலும் நடைபெறுகின்றன.
வால்டாக்ஸ் சாலையில் கடந்த சில நாட்களாக மூன்று சக்கர வாகனங்களில் விறகு அடுப்புகள் ஏற்றப்பட்டுச் செல்வதைக் காண முடிகிறது.
இது குறித்து பேசின் பாலம் கூட்ஸ் ஷெட் சாலையில் இயங்கி வரும் உற்பத்தி நிலையப் பணியாளர்கள் கூறுகையில், "இதற்கு முன்பு எரிவாயு அடுப்புகளையே அதிகமாகத் தயாரித்து வந்தோம். ஆனால், தற்போது விறகு அடுப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago