2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சம்மாந்துறையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபெருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர் 

நேற்று (22) மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் உள்ள வீடு ஒன்று மாலை 5.45 மணியளவில் அம்பாறை விசேட பொலிஸ் குழுவினரால் முற்றுகையிட்டு சோதனை இடப்பட்டது.

இதன்போது வீட்டின் காணிப்பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வெடிமருந்து உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை இன்று (23) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .