Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைவிடப்பட்ட சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்துக்குப் பதிலாக, இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிக்க, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
512 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில், 1,500 மெகாவொட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்குடன், சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க, உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இத்தொகை மெஹாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய புதிய மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கவுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் பீ.எம்.எஸ்.பட்டகொட தெரிவித்தார்.
சம்பூரில், நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிப்பதற்கு எதிராக, வரையறுக்கப்பட்ட சுற்றாடல் மன்றம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அப்பிரதேசத்தில், நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கப்போவதில்லை என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, மேற்படி நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்துக்கு பதிலாக, இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில், அமைச்சின் செயலாளர் பட்டகொடவிடம் கேட்டபோது, அவர் அதனை உறுதி செய்த போதிலும், அந்த மின்னுற்பத்தி நிலையம், எங்கு நிர்மாணிக்கப்படும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றார். பெரும்பாலும் அது, கிழக்கு மாகாணத்திலேயே நிர்மாணிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.
13 minute ago
27 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
27 minute ago
35 minute ago