Freelancer / 2025 ஜூன் 11 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் கேரள கடற்கரைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் நேற்று முன்தினம் தீப்பரவலுக்குள்ளான நிலையில் அதனை அணைக்கும் பணியில் இந்தியக் கடலோர காவல்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், தீ வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இந்த சீன சரக்குக்கப்பல், கொழும்பு துறைமுகத்திலிருந்து கடந்த 07 ஆம் திகதி மும்பை நோக்கிப் பயணித்தது.
குறித்த கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பையடுத்தே அதில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. (a)

8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago