2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சர்வதேச சுற்றுலா ராணி கிரீடத்தை வென்ற ஆதித்யா

Janu   / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற "மிஸ் டூரிசம் யுனிவர்ஸ் - 2025" போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஆதித்யா வெலிவத்த, “Queen of the International Tourism” (சர்வதேச சுற்றுலாவின் ராணி) என்ற கிரீடத்தை வென்று திங்கட்கிழமை (11) அன்று இலங்கை வந்தார்.

உலகின் 17 நாடுகளைச் சேர்ந்த 17 பேர் பங்கேற்ற இந்தப் போட்டி, ஜூலை மாதம் 30 முதல் ஓகஸ்ட் 08 வரை பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெற்றது.

இந்த வெற்றியைத் தவிர, ஆதித்யா வெலிவத்த இந்தப் போட்டியில் சிறந்த தேசிய உடை மற்றும் மிக அழகான புகைப்படவியல் ஆகிய  இரண்டு விருதுகளையும் வென்றுள்ளார்.

ஆதித்யா வெலிவத்த ஒரு பிரபலமான பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X