Freelancer / 2022 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த முன்மொழிவை முன்வைத்தார்.
இந்தநிலையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அத்துடன் அமைச்சு பதவிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைக்கு தீர்வுகளை தேடுவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். (a)
9 minute ago
42 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
42 minute ago
44 minute ago
1 hours ago