2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம்: 10 வருடங்களுக்குப்பின் தண்டனை

Freelancer   / 2024 ஜூன் 11 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்காக சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டிற்கு அருகில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த சாதாரண தர பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது 35 வயதுதாகும் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தவிர, குற்றவாளிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இழப்பீடு வழங்காவிட்டால் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும் என்றும், அதையும் செலுத்தாவிட்டால் மேலும் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .