Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து துரித உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள துரித உணவகங்களில் சவர்மா கிரில் சிக்கன் உள்ளிட்டவை சமைக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் துரித உணவகத்தில் கடந்த 16ம் திகதி இரவு சவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளை சாப்பிட்ட நாமக்கல் ஏ எஸ் பேட்டையை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) என்பவர் திங்கட்கிழமை (18) காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது தாயார் சுஜாதா, மாமா அத்தை மற்றும் தம்பி உள்ளிட்ட நான்கு பேரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் ச. உமா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: "நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள துரித உணவகத்தில் உணவு சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவ மாணவியர் 11 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது அவர்களுக்கு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் உடல் நலத்துடன் உள்ளனர். இச்சூழலில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட துரித உணவகத்தில் அவர் சவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளை சாப்பிட்டது தெரியவந்தது. சிறுமி இறந்தது உண்மைதான். அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் துரித உணவகத்தில் இருந்த இறைச்சி உணவு வகைகள் மற்றும் அந்த உணவகத்திற்கு இறைச்சி வழங்கும் கடையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதனிடையே அந்த துரித உணவகத்தில் உணவு சாப்பிட்ட 43 பேர் நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள அரசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
33 minute ago
45 minute ago