2024 மே 18, சனிக்கிழமை

சிறையில் இடம்பெற்ற கொலை ஒப்பந்தம் குறித்து விசாரணை

Simrith   / 2024 மே 15 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி சிறைச்சாலையில் உள்ள சிறைச்சாலை அதிகாரி ஒருவர், சக பெண் வார்டன் ஒருவரைக் கொலை செய்ய சிறையிலிருந்த பெண் கைதியை ஈடுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று காலி சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, குற்றம் சாட்டப்பட்ட சிறைச்சாலை அதிகாரி மற்றும் இலக்கு வைக்கப்பட்ட வார்டன் உட்பட பல நபர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி சிறைச்சாலையின் எல்லைக்குள் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் பெண் கைதி ஒருவருக்கு சிறைக்காவலர் ஒப்பந்தம் ஒன்றை வழங்கியதாக வார்டன் தாக்கல் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலை திணைக்களமும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .