2025 நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை

சிறுவன் சடலமாக மீட்பு

Freelancer   / 2025 நவம்பர் 23 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் கடலட்டைப் பண்ணைக்குக் காவலுக்குச் சென்ற சிறுவன் ஒருவர் நேற்று (22) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் (வயது 17) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணைக் காவல் பணிக்காக நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை இரவு சென்ற சிறுவன் காலையில் கரை திரும்பாத நிலையில் காணாமல்போயிருந்தார்.

சிறுவனைத் தேடி அந்தப் பகுதி மக்கள் தேடுதலை மேற்கொண்டனர். இதன்போது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X