2021 மே 06, வியாழக்கிழமை

சவுதியில் 41 இலங்கைப் பணிப்பெண்கள் தடுத்து வைப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 16 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

41 இலங்கைப் பணிப்பெண்கள் சவுதி அரேபியாவில் எவ்வித காரணங்களுமின்றி நீண்ட நாள்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரென, எமினெஸ்ட் இன்டநெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

18 மாதங்களாக குறித்த பணிப்பெண்கள், ரியாத்தில் முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த பெண்களுக்கு எதிராக, எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதுடன்,இவர்கள் குறித்த எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை சம்பந்தப்பட்டவர்களால் முன்வைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று பெண்களுக்கு குழந்தைகள் இருப்பதாகவும் எனவே இவர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் எமினெஸ்ட் இன்டநெசனல் நிறுவனம்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .