2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...

Janu   / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியின்  சமீபத்திய புகைப்படங்களை பொலிஸார் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ளதுடன் அவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

சந்தேக நபர்,  243/01, ஜெயா மாவத்தை, நீர்கொழும்பு வீதி, கட்டுவெல்லகம என்ற முகவரியில் வசிக்கும் 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது தேசிய அடையாள அட்டை எண் 995892480V. ஆகும்.

வழக்கறிஞர் போல் நடித்த செவ்வந்தி, நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு ரிவால்வரை கடத்தி வந்து கொலையில் ஈடுபட்ட  துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளரை  071-8591727 என்ற எண்ணில் அல்லது சிசிடியின் பொறுப்பதிகாரியை 071-8591735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கவும் பதில் பொலிஸ் மா அதிபர்  பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தகைய தகவல்களை வழங்குபவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும்  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X