Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை சீர்குலைத்துள்ளது.
இதனையடுத்து, எண்ணெய் விலை மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக சிஎன்என் பிசினஸ்(CNN Business தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் அவசரகால இருப்பு நிலையிலிருந்து எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறியிருந்தார்.
அப்படியிருந்தும், அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் 61 டொலருக்கும் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 10% அதிகரிப்பாகும்.
முன்னதாக, விலை 15% வரை உயர்வடைந்திருந்தது. உலகளாவிய அளவுகோலின்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று கிட்டத்தட்ட 68 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 11% அதிகரிப்பாகும்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago