Freelancer / 2026 பெப்ரவரி 10 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்த சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி, கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி சென்னை வந்தடைந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின்னர் நேற்று முன்தினம் டில்லிக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இந்தியாவின் மகாசாகர் திட்டத்திற்கு ஆதரவு அளித்து வருவதற்காக சீஷெல்ஸ் ஜனாதிபதி ஹெர்மினிக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது சர்வதேச பிரச்னைகள், இருநாட்டு உறவுகள் ஆலோசிக்கப்பட்டதுடான் தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படட்டமை தெரிவிக்கப்படுகிறது. (a)

30 minute ago
37 minute ago
52 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
52 minute ago
55 minute ago