2025 ஜூலை 05, சனிக்கிழமை

சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் மீது தாக்குதல்

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெட்டிபொல பிரதேச  பரீட்சை மத்திய நிலையத்தில் நடைபெற்ற சாதாரணதர பரீட்சைகளில், இன்று (10) நடைபெற்ற கணிதப்பாட பரீட்சையின் போது, மாணவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவரொருவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

கணிதப்பாட பரீட்சைக்கான வினாத்தாளின் முதலாம் பகுதி நடைபெற்று முடிந்து, வழங்கப்பட்ட இடைவேளையின் போது, அங்கு வந்த மாணவர் குழுவொன்றால் குறித்த மாணவன் தாக்கப்பட்டதாகப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸாரால் குறித்த மாணவனிடம் வாய்மொழி மூலம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் பின்னர் அம்மாணவன் பரீட்சைக்கு மீள தோற்றியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .