2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சாமர சம்பத்துக்கு விடுதலை

Nirosh   / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை பாலித ஆரியங்கஷ
 
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபரை முளந்தாழிட வைத்ததாக கூறி, பதுளை பொலிஸாரால் ஊவா மாகாண முன்னாள் ஆளுநரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத்துக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
 
இந்த வழக்கு விசாரணை இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. மத்தியஸ்த சபையில் ஏற்பட்ட இணக்கப்பாடுக் காரணமாக இந்த வழக்கு விசாரணையில் இருந்து சாமர சம்பத்தை விடுதலை செய்வதாக நீதவான் சமிந்த கருணாதாச உத்தரவிட்டுள்ளார்.
 
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியால் பதுளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X