Editorial / 2021 மே 03 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலிண்டருக்கான பற்றாக்குறை இல்லையென தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, தற்போதைய தேவைக்கு போதுமானளவு ஒட்சிசன் சிலிண்டர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. தேவையேற்படின் சிங்கப்பூரிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலிண்டர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.
மாத்தறை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
நாட்டில் இரண்டு பிரதான நிறுவனங்கள் மருத்துவத் துறைக்குத் தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை உற்பத்தி செய்கின்றன. தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இவ்விரண்டு நிறுவனங்களிடமும் உற்பத்தி தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கையை கோரினார்.
மருத்துவ துறைக்கு ஒரு நாளைக்கு தேவையான 22 ஆயிரம் லீற்றர் ஒட்சிசன் சிலிண்டர்களை இவ்விரு நிறுவனங்களும் உற்பத்தி செய்கின்றன. தற்போது அந்த உற்பத்தி 67 ஆயிரம் லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 15 ஆயிரம் லீற்றர் ஒட்சிசன் சிலிண்டர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, மருத்துவ துறையில் ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றார்.

எனவே, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதென்றும் ஒட்சிசனுக்கான தேவை அதிகரிக்குமாயின், சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை தேவையான அளவு மேலதிகமான இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago