2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய தீர்மானம்

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிர்மலன் விக்னேஷ்வரன் இன்று (06) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனைப் பரிசீலித்த விஜித் மலல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் பி. பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் குழாம், குறித்த ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்குமாறு தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மவ்பிம லங்கா நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .