2026 மே 01, வெள்ளிக்கிழமை

சித்திரைக்கு பேக்கரி உணவு விலை உயரும்

R.Maheshwary   / 2021 மார்ச் 24 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமென, இலங்கை அனைத்து பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவையை அடிப்படையாகக் கொண்டே, குறித்தவிலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக, அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எண்ணெய், பட்டருக்கு அதிக வரி விதிக்கப்படுவதால், பேக்கரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் அதனால், பேக்கரி தொழிலை நடத்துவதில் உரிமையாளர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மற்றைய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அச்சங்கத்தின் தலைவர், இது குறித்துத் தெரிவித்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச்சாடியுள்ளார்.

எனவே, பண்டிகைக் காலத்தில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என, அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .