2026 மே 14, வியாழக்கிழமை

'சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிரானவர்களே மரண தண்டனையை எதிர்க்கின்றனர்'

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதை வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து, வீதிக்கு இறங்கியுள்ளவர்கள்  சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிராக செயற்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பாரிய குற்றச் செயல்களின் பின்னால் போதைப்பொருளே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே, இந்த போதை வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென தான் தீர்மானித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் இன்று (1) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .