2026 மே 02, சனிக்கிழமை

சிறுவர்களை ’அழைத்துப் போக வேண்டாம் ’

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த உற்சவ காலத்தில் சிறுவர்களை தேவையற்ற விதத்தில் கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்ல வேண்டாமென இராணி சீமாட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீமாட்டி வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள்; மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அதிகமானோர் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 70 சிறுவர்கள் குறித்த வைத்தியசாலையிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்கள் அனைவரும் தற்போது வெவ்வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் சிகிச்சைக்காக வருபவர்கள் வீண் பயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாமென்றும் சிறுவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறி காணப்படுமாயின் விரைவாக அருகிலிருக்கும் வைத்தியசாலைக்க அழைத்துச் செல்லுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .