Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஒழுங்குசெய்துள்ள, சில்பசேனா தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி, கொழும்பு- பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நாளை18) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜுவ சேனசிங்ஹவின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ள இக் கண்காட்சி, தொடர்ந்து 4 தினங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கமைய, நாளை ஆரம்பமாகும் இக் கண்காட்சி 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சில்பசேனா கண்காட்சியானது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளதுடன், அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். அத்துடன், கண்காட்சியின் 2 ஆம் நாள் நிகழ்வு, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், 3 ஆம் நாள் நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்ற உள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
19 minute ago
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
38 minute ago
54 minute ago