2026 மார்ச் 12, வியாழக்கிழமை

சில விமான சேவைகள் இன்றும் ரத்து

Freelancer   / 2026 மார்ச் 12 , மு.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.

இதன்படி, இன்று (12) மற்றும் நாளை (13) கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என  அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் யூ.எல். 231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் யூ.எல். 232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .