Nirosh / 2021 மே 03 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்று சிந்தனைக் கொண்ட இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், பெரியாரியக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்ள், ஆசிரியர்கள் என பலரும் சி.ஐ.டியினர் என தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் சிலரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த விசாரணைகளால், மலையக சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகி இருப்பதாகவும், இதனால் தங்களுக்கு பாதுகாப்பாற்ற நிலைமையொன்று ஏற்படுவதாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோர் தமிழ்மிரருக்குத் தெரிவித்தனர்.
தங்களது வீடுகளுக்கும், தொழில் செய்யும் நிறுவனங்களுக்கும் மோட்டார் சைக்களில்கள் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர், தங்களை சி.ஐ.டி அதிகாரிகளென அறிமுகப்படுத்திகொண்டு விசாரணைக்கு உட்படுத்துகின்றனர் என்றும் விசாரணைகளுக்கு முகங்கொடுத்தவர்கள் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் இயங்கும் சுயாதீனமானக் குழுக்கள், அமைப்புக்களின் தகவல்கள் திரட்டப்படுவதாகக் கூறியே தங்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணைக்கு முகங்கொடுத்தோர் தெரிவித்தனர்.
நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அமைய சி.ஐ.டி உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு தாம் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கும் அந்த இளைஞர்கள், ஆனால், விசாரணைகள் என்கிற பெயரில் தங்களால் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் சிவில், சமூக செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
5 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
55 minute ago