Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுவிட்டரின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, இரண்டு நாள்களுக்கு முன்னர், இலங்கைக்கான சீனத் தூதுரகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த டுவிட்டர் கணக்கில், மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் டுவிட்டர் கணக்கின் முடக்கத்தை, டுவிட்டர் நிறுவனம் விடுவித்துள்ளமையால், சீனாவில் டுவிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள முடக்கத்தை சீனா விலக்குமா என, பின்தொடரும் ஒருவரால் பதிவிடப்பட்ட கேள்விக்கு, சீனாவின் விதிமுறைகளையும் சட்டங்களையும் டுவிட்டர் கடைபிடிக்குமாயின், இந்த முடக்கம் எடுக்கப்படலாம் என்று சீனா நம்புவதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
WeChat, Weibo போன்றவற்றுக்கு, பில்லியன் கணக்கான பாவனையாளர்கள் உள்ளனர் என்றும் உள்நாட்டுச் சட்டங்களை மீறியபோது, இலங்கையும் டுவிட்டருக்கு தடை விதித்திருந்தது என்றும், சீனாவின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
43 minute ago