2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சீனாவிலிருந்து வருவோரின் எண்ணிக்கை குறைவு

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்து வருவதாக, விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய,  நேற்று   (02) இரவு வருகைதந்த,  சீன விமானச் சேவைக்குச்  சொந்தமான  மூன்று விமானங்கள் மற்றும்  சீனாவிலிருந்து இன்று (03) அதிகாலை இலங்கைக்கு வருகைதந்த,  ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான விமானம் என்பவற்றில், 61 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகைதந்தவர்களில் 50 பேர் சீனர்கள் எனவும் 11 பேர் இலங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு விமானத்தில் 250 பேர் வரை பயணிக்கக் கூடிய குறித்த 4 விமானங்களில் 61 மாத்திரமே இலங்கையை வந்தடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .