2025 மே 01, வியாழக்கிழமை

சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை (பூஸ்டர்) வழங்குவதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

பல சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும், தடுப்பூசி போடப்பட்டவர்களில் சிலருக்கு வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இதன் காரணத்தால் பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனவரி மற்றும் பெப்ரவரியில் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும், இரண்டாவது தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா கட்டுப்பாட்டில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .