Editorial / 2025 ஜூலை 23 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ.எச்
சுட்டக்கோழி (பார்பிக்யூ) இறைச்சி உணவு ஒவ்வாமையால் 10 பெண்கள் 06 ஆண்கள் சிறுவர்கள் 03 பேரும் என 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நகர சபையின் தலைவர் மஹ்தி அவர்கள் பார்வையிட்டார்.
இதேபோன்று மூதூர் வைத்தியசாலையில் மூவரும் நிலாவெளியில் இருவரும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
செவ்வாய்க்கிழமை (22)அதிகாலை 4.மணியிலிருந்து வயிற்றோட்டம், வாந்தி, அதிக உஷ்ணத்துடனான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படவே அவதியுற்ற நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் விசாரணைகள் செய்த போது அவர்கள் அனைவரும் சுட்ட கோழி இறைச்சியுடன் இரவு உணவை சாப்பிட்டதாகவும் அந்த உணவை ஒரே கடையில் வாங்கியதாகவும் கூறுகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்பட்ட இந்த வியாதிகளுக்கு குறிப்பிட்ட அந்த உணவு தான் காரணம் என வைத்தியர்களின் அறிக்கைகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டால் அவ் உணவுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
5 hours ago
5 hours ago
7 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
05 Apr 2026