Editorial / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜீ.ஜயசேனவின் தங்கநகை திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், சுமேதா எம்.பி மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன் குறித்த வளையல் திருடப்படும் காட்சிகள் பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, எம்.பியின் வீட்டில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட நபர் ஒருவரே தங்க வளையலைத் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டு சம்பவம் நிகழ்வதற்கு முதல் நாள் சந்தேகநபர், நாடாளுமன்ற உறுப்பினரிடம் நோய் வாய்ப்பட்டுள்ள தனது மகனின் தேவைகளுக்காக 2000 ரூபாயை கோரியதாக சுமேதா எம்.பி. பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடமைப்புத் தொகுதியிலுள்ள வீட்டிலிருந்தே 3 பவுண் பெறுமதியான தங்க வளையல் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago