2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சு.க அமைப்பாளர் பதவியிலிருந்து சந்திரிக்கா நீக்கம்?

Editorial   / 2019 ஜனவரி 19 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக, கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதகாவும் சு.கவின் 15 தொகுதி அமைப்பாளர்கள், சந்திரிகாவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான யோசனையை முன்வைத்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார்.

இதன் அடிப்படையிலேயே அவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .