Freelancer / 2025 ஜூலை 04 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றும் 2 சிறார்களின் என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் இரண்டு சிறார்களின் என்புக் கூடுகளுடன், சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, இதுவரையில் 42 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 37 என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். R
6 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
2 hours ago