Janu / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை (30) அன்று ஒரு மனித எலும்பு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமான நிலையில், வியாழக்கிழமை (30) மூன்றாம் கட்டத்தில் எடுக்கப்பட்ட 1 எலும்புக் கூட்டுடன் , மொத்தமாக 241 மனித எலும்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 240 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (30) மீட்கப்பட்ட எலும்புக்கூடு, ஒரு பதின்ம வயதுடையவருடையது (Teenager) என தெரிவிக்கப்பட்டுள்ளது
மே தினமான நாளையும் (01), நிபுணர்கள் குழுவினர் தமது அகழ்வு பணிகளை நண்பகல் 1.30 மணி முதல் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது




2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago