2021 மே 06, வியாழக்கிழமை

செல்பியால் வந்தது விபரீதம்

Editorial   / 2021 மார்ச் 09 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்து கொள்வதற்கு ஹர்ஷன ராஜகருணா, அங்குணகொலபெலஸ சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.

அங்கு சென்றவர், ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஹர்ஷன ராஜகருணா எம்.பிக்கு அனுமதியளித்த சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் தேடியறிந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .