Freelancer / 2025 ஜனவரி 19 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகளை தலா 6 அங்குலமாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த வான்கதவுகளை 12 அங்குலமாகத் திறக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று (18) இரவு முதல் மகாவலி ஆற்றின் சில பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றுப் படுகையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதன்படி, திம்புலாகல, ஈச்சிலம்பற்று, ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமன்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் மகாவலி ஆற்றின் கரையோர தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, அந்தப் பகுதிகளில் மகாவலி ஆற்றின் அருகே வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. R
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago