2025 ஜூலை 05, சனிக்கிழமை

சேனா புழுவால் பூசணிக்காய் செய்கைக்கும் பாதிப்பு

Editorial   / 2019 ஜனவரி 08 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மை காலமாக சோளம் பயிர்ச்செய்கையை அழித்துவந்த சேனா எனப்படும் புழுவின் தாக்கமானது, தற்பொழுது பூசணிக்காய் மற்றும் கௌப்பி பயிர்களிலும் பரவியுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் அம்பாறை மாவட்டத்தில் சோளம் பயிர்ச் செய்கையானது, சேனா புழுவின் தாக்கத்தால் 3,000 ஏக்கர் வரை அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மட்டக்களப்பில், கெவிலியாமடுவ சுமனரத்ன விகாரையில் பயிரிடப்பட்ட சோளமானது, 15 ஏக்கர் அழிவடைந்துள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் குறித்த சேனா புழுவின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாரியளவில் நஷ்டத்தை ​எதிர்கொண்டுவருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .