Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 09 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சிட்னியில் நேற்று (08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடான சந்திப்புக்குச் சென்றிருந்தபோது, அங்கு திரண்டிருந்த தமிழ் இளைஞர் கோஷ்டி ஒன்று, அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலகத்தில் ஈடுபட்டுள்ளது.
ஜெனீவாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து, புலம்பெயர்ந்து வாழ் தமிழர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்குடன், தமிழ் மக்கள் செறிந்துவாழும் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தற்போது விஜயம் செய்துவருகிறார்.
இதன் ஓர் அங்கமாக தற்போது அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள சுமந்திரன், புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களான அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிட்னி கிளையும் இணைந்து சிட்னியில் ஏற்பாடு செய்த சந்திப்பு நிகழ்வொன்றுக்கு சமுகமளித்திருந்தார்.
சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையில், மாலை 4.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சென்றபோது, அங்கு திரண்டிருந்த சுமார் 30 முதல் 40 வரையான தமிழ் இளைஞர்கள், சுமந்திரனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் 'சிறிலங்கா அரசின் கைகூலியே வெளியேறு' என்றும் தகாத வார்த்தைகளாலும் கூச்சலிட்டனர்.
அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும், தனது வருகைக்;கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களையும் மண்டபத்தின் உள்ளே வந்து, அவர்களது பிரச்சினைகளை தன்னுடன் பேசுமாறும், அவர்களது கேள்விகளுக்கு தான் பதிலளிக்க ஆயத்தமாகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கஈ நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இளைஞர் கோஷ்டி, தொடர்ச்சியாக துர்வார்த்தைகளால் சுமந்திரனுக்கு எதிராக கோஷமிட்டனர்.
'முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது தொடர்பாக என்ன கூறினீர்?' என்றும் 'தமிழ்க்கைதிகள் அங்கு உண்ணாவிரதம் இருக்கும்போது, இங்கு உமக்கு என்ன வேலை?' என்றும் சுமந்திரனை நோக்கிக் கூக்குரலிட்ட இந்த இளைஞர் கோஷ்டி, சுமந்திரனை பதில் கூற விடாமல் தொடர்ந்தும் கலகத்தில் ஈடுபட்டது.
'துரோகியே வெளியேறு' என்று உரத்த குரலில் கத்திய ஓர் இளைஞர், இரண்டு தடவைகள் சுமந்தரனின் நெஞ்சில் கைவைத்து தள்ளியதாகவும் அதனை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தடுத்துநிறுத்தியதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார்.
சுமந்திரன் மீது தாக்குதல் நடத்துவதே அங்கு வந்திருந்த கும்பலின் நோக்கமாக இருந்தது என்றும், அவர்களது பிடியிலிருந்து அவரை மீட்டெடுப்பதில் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பெரும் பாடுபட்டதைக் காணக்கூடியதாயிருந்து என்றும், சம்பவங்களை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்கள் இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்க, மண்டபத்தின் அயலில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, மாலை 5.30 மணியளவில் பொலிஸார் அங்கு வருகைதந்தனர்.
கலகத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்குத் தலைமை தாங்கியவர்கள் என்று சந்தேகப்பட்டவர்கள் ஆகியோரை எச்சரித்து அவர்களின் பெயர் விவரங்களை பெற்றுக்கொண்ட பொலிஸார், உடனடியாக அங்கிருந்து கலைந்து செல்லும்படி உத்தரவிட்டதை அடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது.
சுமார் ஒரு மணிநேரம் காலதாமதமாக ஆரம்பித்த சுமந்திரனின் சந்திப்பு, மாலை 5.45 மணியளவில் ஆரம்பமாகி இரவு 7.45 மணியளவில் நிறைவுபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago