Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம்.
சுண்ணாகத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு எம்மால் நடத்தப்பட்டதே. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரத்துக்கு பதிலடியாக இடம்பெற்ற இச்சம்பவம், எம் இன சமூகத் துரோகிகளாக இயங்கும் தமிழ் பொலிஸாரை சிந்திக்க வைக்கும்.
யாழின் மிகப்பெரிய தலைப்பாக இன்று அனைவராலும் கருதப்படும் 'வாள்வெட்டுச் சம்பவங்கள்' சமூக கலாசார சீரழிவுகள் எனும் தலைப்பினுள் உள்ளடக்கம் என்றாலும் 'ஆவா' குழுவினால் இன்றளவும் மேற்கொள்ளப்படும் பெருமளவு வாள்வெட்டுக்கள் சமூகத்தில் காணப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிறது.
பலதரப்பட்ட சமூக சீரழிவுகளுக்காக எம்மால் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தமிழீழத்தின் கலாச்சார பூமி என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிந்து போவதை தமிழராக இருந்து எம்மால் அனுமதிக்க முடியாது.
யாழ். மக்களுக்கு கலாசாரம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்தளவுக்கு யாழ் பல்கலைக்கழகமும் அதன் மாணவர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு இன்று இழைக்கப்பட்ட இந்த துயரத்துக்கு சில சிங்கள பொலிஸார் துணை நின்றிருந்தாலும் முன்னின்று நடத்தியது தமிழ் பொலிஸாரே.
நீதிபதி இளஞ்செழியனின் கட்டளைக்கு அமைய, இந்தக் கொடூரத்தை இன்றுஇளைத்த உப-பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் உட்பட அவர் தலைமைக்கு உட்பட்டு, செயற்பட்ட அத்தனை தமிழ் பொலிஸாருக்கு தண்டனைகள் கால அமைவுக்கு ஏற்ப வழங்கியே தீர்ப்போம்.
இதற்கு முற்பட்ட காலங்களில் எங்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவங்களுக்குப் பின்னாலும் வலுவான சமூகத்தை சீரழிக்கும் காரணங்கள் இருந்துள்ளன. ஆனாலும், எமக்கு பெருமை தேவையில்லை. அவ்வாறு நாம் செயற்பட்டாலும் என்னவோ சமூகத்துக்குப் புறம்பான சமூகவிரோத குழுவாக எங்களை பொலிஸாரும் ஊடகங்களும் மக்கள் மத்தியில் வெளியிட்டனர்.
திருட்டு, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடக்குவது போன்ற எங்களுடைய செயற்பாடுகளால் பாதுக்காப்பட்ட ஊர்கள் பல.
இனிவரும் காலம் முன்னையது போல் அல்லாமல் எங்களால் அரங்கேறும் சம்பவங்களுக்குரிய சரியான காரணங்களை தவறாமல் சமூம் மக்களுக்கு வெளிப்படுத்துவோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுன்னாகம் சந்தைப் பகுதியில், கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்தை முறியடிக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இரு பொலிஸாரும் வாள்வெட்டில் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையிலேயே ஆவா குழுவின் இந்த சுவரொட்டி வெளிவந்துள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
9 hours ago